
சற்று பெரியவள் ஆனதும் என் வயதை ஒத்த தோழிகள் எல்லாம் வீட்டில் இருந்த வெளியே வராமல் பேச முடியாமல் இருக்கும் போது, எங்கள் தம்பிகள் மூலம் என்னைக்கு எந்த வீட்டு கொலுவுக்கு எத்தனை மணிக்கு போவது என்பது தீர்மானம் ஆகும். அது தான் நாங்கள் பேசி கொள்ள நல்ல சந்தர்ப்பம். ஊர் கதை உலக கதை எல்லாம் அந்த பொம்மைகள் காது கிழியும் வரை பேசி தீர்த்து விட்டு வழக்கம் போல் வீட்டில் போய் திட்டு வாங்கியது ஒரு சுகம்.
பின்னர் இது போன்ற சந்தோசத்திற்காக அம்மாவை நம்ம வீட்டிலும் கொலு வைக்கலாம் என்று நச்சு பண்ணி, அப்பா அதை outright ஆக reject பண்ணியது எல்லாம் அது ஒரு கனாக்காலம்.
எனக்கு திருமணம் நிச்சயம் ஆனதும் அம்மா வந்து ஆசையாய் சொன்னது, " அவங்க வீட்ல தலமுறை தலைமுறைய கொலு வக்கிறது வழக்கமாம்". எனக்கு ஒரே சந்தோசம் தலை கால் புரியல. ஆனா விதி வலியது ஆச்சே நமக்கு புகுந்த வீடோ மதுரை (பொறந்த வீடும் மதுரை தான்) ஆனா ரெண்டு பேரும் வேலை நிமித்தம் இருந்தது சென்னைல என்ன பண்ண? ஒன்னும் பண்ண முடியல. ஆனா ரெண்டு வருசத்தில ரெண்டு பேரும் மதுரை வந்துட்டோம்.
அதுல இருந்து கொலு வந்தாலே ஒரே கொண்டாட்டம் தான். (கொஞ்சம் திண்டாட்டமும் தான், அப்புறம் ஆபீஸ் வேலையும் பாக்கணும்ல, எங்க அம்மா மட்டும் இல்ல இது ரொம்ப பெரிய திண்டாடமோ திண்டாட்டம் தான்). ஒவ்வொரு வருசமும் இந்த வருஷம் ஒரு அருவி பன்றேன் அது லிங்க அபிஷேகம் செய்யும் அதுக்கு இத வாங்குங்க, இந்த வருஷம் கைலாஷ மலை செய்ய போறேன் (அது வாங்கிட்டு வந்த சாமான் பாத்தாம குன்று ஆனது தனி கதை) அப்படின்னு ஒரு பெரிய budget போட்டு வீட்டுகாரரை கொள்ளை அடித்து வரவங்க போறவங்க எல்லாம் உங்க வீட்டு கொலு சூப்பர் அப்படின்னு பேர் வாங்கரதுக்குள்ள நான் படர பாடு இருக்கே எங்க அப்பா.
ஆனாலும் அது நிச்சயமா ஒரு மகளிர் திருவிழா தான். அங்க அங்க இருக்கிற போட்டோ எல்லாம் சட்சாத் எங்க வீட்டு கொலு போட்டோ தான். உங்க அபிப்ராயத்தை பின்னூட்டமா போடுங்க.
1 கருத்து:
கொலுவையும் அது சம்பந்தமான நினைவலைகளையும் அழகா பகிர்ந்திருக்கீங்க.. ஜூப்பரு :-)
கருத்துரையிடுக