செவ்வாய், நவம்பர் 29, 2011

கோதுமை ரவா பொங்கல்

கோதுமை ரவை பொங்கல்

தேவையான பொருட்கள்:
சம்பா கோதுமை ரவை - 1 கப்
பாசிப்பருப்பு - அரை கப்

நெய் - 3 டேபிள் ஸ்பூன்
இஞ்சி விழுது - அரை டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு


செய்முறை:

* பிரஷர் குக்கரில் நெய் ஊற்றி இஞ்சி விழுது, மிளகு, சீரகம் சேர்த்து நன்கு பொரிக்கவும்.

* பாசிப்பருப்பை தண்ணீரில் ஒரு முறை களைந்து அதனையும் குக்கரில் இட்டு ஒருமுறை கிளறி விடவும்.

* குக்கரில் 3 கப் தண்ணீரை ஊற்றி, அது நன்கு கொதிக்கையில்
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.


* சம்பா கோதுமை ரவையைக் களைந்து கொதிக்கும் தண்ணீரில் போட்டு நன்கு கலந்து விட்டு பிரஷர் குக்கரை மூடி வேகவிடவும்.

* பொங்கல் வெந்து 2 விசில் விட்ட பிறகு 3 நிமிடங்கள் குறைந்த
தீயில் வைத்து அணைக்கவும்.


* பிரஷர் அடங்கியவுடன் குக்கரை திறந்து பதமாக வெந்த பொங்கலில் கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

கருத்துகள் இல்லை: