செவ்வாய், ஜூன் 12, 2012

புகை பிடித்தல் – சில குறிப்புக்கள்

இந்த குறிப்புக்கள் எனக்கு ஈமெயிலில் வந்தவை.  பகிர்ந்துகொண்டால் பலருக்கும் பயன் தரும் என்பதால் பதிவிடுகிறேன்.

மே 31-ம் நாள் உலகம் முழுவதும் புகையிலை ஒழிப்பு நாள்
MAY 30,2012

புகை பிடித்தல் – சில குறிப்புக்கள்
” to quit smoking all you need is a cigarette and a few wet matches ” என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. திரைப்படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகளைத் தடை செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் முன்மொழிந்திருப்பது, பல் வேறு மட்டங்களில், விதம் விதமான
விமர்சனங்களைக் கிளப்பி இருக்கிறது. புகைபிடிக்கிற பழக்கம், சமூகத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது என்பதில் நிச்சயமாக ஐயமில்லை.

புகை பிடிக்கிற பழக்கம் இருக்கிறவர்களில், பெரும்பான்மையானோர்,அப்பழக்கத்தை விட்டு ஒழித்து விடவேண்டும் என்று நினைத்து, முடியாமல் சிரமப்படுகிறவ்ர்கள் தான் என்பது என் கணிப்பு. இந்தப் புகைபிடிக்கிற பழக்கத்தை ஒட்டு மொத்தமாக சமூகத்தில் இருந்து களைந்து விட, இருக்கிற எளிமையான ஒரே வழி, ஒட்டுமொத்தமாக சிகரட்டு உற்பத்தி, விநியோகத்தைத் தடை செய்வது என்று நினைக்கலாம். ஆனால், அது அத்தனை எளிய காரியமில்லை. புகையிலை விவசாயிகள், புகையிலை வர்த்தகர்கள், சிகரட்டு ஆலையில் வேலை செய்பவர்கள், அந்தத் தொழிலில் புழங்கும் பணம், நம் உள்நாட்டு உற்பத்தியில் சிகரட்டுத் தொழிலின் பங்களிப்பு, அந்தத் தொழிலில் முதலீடு செய்திருக்கும் உள்நாட்டு வெளிநாட்டு நிதி நிறுவனங்கள், சிகரட்டு உற்பத்தியிலும், விற்பனையிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும், வேலைவாய்ப்புப் பெறுபவர்கள் அனைவரையும் பாதிக்கக் கூடிய ஒரு பிரச்சனையை, நான்கு பேர் சேர்ந்து முடிவெடுத்து விட முடியாது. புகைபிடிக்கிற காட்சிகளை, திரைப்படங்களில் இருந்து நீக்குவதன் மூலம், அப்பழக்கத்தை படிப்படியாகவாவது சமூகத்தில் இருந்து ஒழித்து விட வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை, அதாவது அவர்கள் சொல்வது நடக்கும் என்றால். ஆனால், அது ஒரு படைப்பாளியின் உரிமையில் கைவைக்கிற செயல் என்பதையும்
மறந்து விட முடியாது. அதுவும், சமூகத்தில் இருக்கும் புகைப்பழக்கத்திற்கும், திரைப்படங்களில் வருகின்ற புகைப்பிடிக்கிற காட்சிகளுக்கும், எவ்வளவு தூரம் தொடர்பிருக்கிறது என்பதை முறைப்படி ஆராய்ந்து பார்க்காத வரையிலும். அப்படி ஒரு சமூகவியல் ஆராய்ச்சியோ, அல்லது கருத்துக் கணிப்போ நடந்ததாக நினைவில்லை. அப்படி ஏதேனும் நடந்து, அந்த ஆராய்ச்சியின் முடிவை மக்களிடத்தில் வைத்து, அதன் காரணமாக திரைப்படங்களில், புகைபிடிக்கிற காட்சியை தடை செய்கிறோம் என்று சொன்னால், சமூக நலன் மீது பற்று கொண்டோரிடம் இருந்து ஆதரவு கிடைக்கும். தடை செய்கிற அதிகாரம் தங்களிடம் இருக்கிறது என்ற காரணத்தால், அதை தவறாக பயன் படுத்த முடியாது, அதிலும், இந்தியா போன்ற ஒரு சனநாயக நாட்டில். தங்களுக்கு பிடிக்காதவற்றை, சமூகத்துக்கும் ஆகாது என்று சொல்லி, தடைகளை விதித்துக்கொண்டே போவதற்கு, இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள், தங்களுடைய whims & fanices ஐ எல்லாம் பொது ஊடகங்களில் திணிக்க முடியாது.

இதை வாசிக்கிறவர்கள் அனைவரும், தங்களுக்குத் தெரிந்த புகைப்பழக்கம் இருக்கிற அனைவரிடமும், ஒரு கேள்வியைக் கேட்க வேண்டுகிறேன், அதாவது ” எந்த வயதில் இந்தப் பழக்கம் ஏற்பட்டது? ” என்று. பதில் சொல்பவர்களில் பெரும்பான்மையானோர், 17 வயதில் இருந்து 25 வயதுக்குள்ளாகத்தான் சொல்லுவார்கள். புகைப்பிடிக்கிற பழக்கத்தைப் பொறுத்தவரை, நான் இது வரையிலும், இளவயதில் அப்பழக்கத்துக்கு ஆளானவர்களைத்தான்
பார்த்திருக்கிறேன். நாற்பது வயதில், ஒருவருக்கு திடீரென்று புகைப்பழக்கம் ஏற்பட்டது என்று நான் கேள்விப்பட்டதில்லை. ஆக, சிகரட்டுப் பழக்கம் ஒருவரை, வாலிப வயதில் தான் பற்றிக்
கொள்கிறது. குறிப்பாக, பள்ளி இறுதி வகுப்புகளிலும், கல்லூரிப்பருவங்களிலும் ( குறிப்பாக விடுதிகளில் தங்கிப் படிக்கும் போதும்), salaried bachelors ஆக இருக்கும் போதும் தான். கல்யாணம் ஆனபிறகு மனைவி பார்த்துக் கொள்ளுவார்.

இந்த குறிப்பிட்ட வகையினரை, சிகரட்டுப் பக்கம் போகாமல் பார்த்துக்கொண்டாலே, புகைபிடிக்கிற பழக்கத்தை, பெருமளவில் குறைக்கலாம். அது எப்படி?

1. பள்ளி கல்லூரிகளுக்கு அருகாமையில் ( அதாவது ஒரு குறிப்பிட்ட தூரம் வரையிலும் ) இருக்கும் கடைகளில், சிகரட்டுகள் விற்பனையைத் தடை செய்யலாம். புகைப்பிடிக்கிற பழக்கத்தினால், ஏற்படுகின்ற தீமையை, உடல்நலக்கேடுகளை, சமூகவியல் வகுப்புகளில் ஒரு பாடமாக வைக்கலாம். நான் பள்ளியில் படிக்கின்ற காலத்தில், போதைப் பொருட்கள் கூட புழக்கத்தில் இருந்தன. ஆனால், நானோ என் நண்பர்களோ, அந்தப் பக்கம் ஒதுங்கியதில்லை. பயம் தான் காரணம். போதைப்பொருட்கள் எடுத்துக் கொள்வதினாலான பின் விளைவுகளை நன்றாக
அறிந்திருந்தோம். நரம்பு எலும்புகள் தெரிய ஒரு அரைகுறை உயிருடன் இருந்த ஒரு போதைப் பொருள் ஆசாமியை, ஒரு விவரணப்படத்தில் பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது. உயிரே போனாலும், இந்த வஸ்துக்களை தொடுவதில்லை என்று முடிவு செய்திருந்தேன். ஆனால், புகைக்கு எதிரான இது போன்ற பிரச்சாரம் ஏதும் அப்போதும் இல்லை, இப்போதும் இல்லை.

2.புகைப் பிடிக்கும் பழக்கம் இருக்கும் பெரியவர்கள், தங்கள் குழந்தைகளை, ” கடைக்குப் போய், ஒரு வில்ஸ் பாகெட்டு வாங்கிட்டு வா ” என்று சொல்லாமல் இருத்தலும், குழந்தைகளுக்கு தெரியும்படியாகவே புகை பிடிக்காமல் இருப்பதும் முக்கியம். இவையும் பெருமளவில், இள வயதிலேயே புகைப் பழக்கம் ஏற்படுவதற்குக் காரணமாக இருப்பது.

3. புகைப்பிடிக்கிற பழக்கம் இல்லாத பெரியவர்கள், தங்கள் குழந்தைகளுக்கு புகைப்பழக்கம் இருப்பதைக் கண்டு பிடித்து விட்டால், அதனை ஒழுக்கக் குறைவான விஷயமாகப் பார்க்காமல், உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கிற விஷயமாக மட்டுமே பார்க்க வேண்டும். தங்களுக்கு இருக்கும் மனஅழுத்தத்தினால், பெற்றோரை வெறுப்பேற்றிப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிற வழக்கம் குழந்தைகளுக்கு உண்டு. (“இது •பைனல் இயர், நோ கேபிள் டிவி, நோ கிரிக்கெட், அண்ணா யுனிவர்சிட்டிலே மட்டும் சீட்டு கெடைக்கலன்னா…” வகையான, மிரட்டல்கள், பெற்றோர் நினைப்பதை விடவும் அதிகமான மன அழுத்தத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் ). அதனால், பெற்றோரை வெறுப்பேற்ற வேண்டும் என்று நினைக்கிற குழந்தைகள், தங்கள் உடல்நல்த்துக்கும் கேடு விளையும் என்பதைப் புரிந்து கொண்டு சிகரட்டுபக்கம் எல்லாம் போகாமல், க்ளாஸ¤க்கு கட் அடித்து விட்டு ராணி முகர்ஜி படத்துக்குப் போவது, நடு ராத்திரி டிவி பார்ப்பது போன்ற உபத்திரவமில்லாத விஷயங்களினால் outlet தேடிக் கொள்ளுவார்கள்.

4. ஆந்திராவில் இருக்கும் ராயலசீமா ஆல்கலிஸ் என்ற ஒரு தனியார் தொழிற்சாலையில் , புகைப் பழக்கம் இல்லாதவர்களுக்கு என்று தனியாக ஊக்கத்தொகை வழங்குகிறது. மற்ற நிறுவனங்களும், இது போல ஊக்கத் தொகை வழங்காவிட்டாலும், வேறு ஏதாவது யோசித்து, தங்கள் நிறுவனங்களில் புகைப்பழக்கம் இல்லாமல் செய்வதற்கு வழிமுறை செய்யலாம். அந்த
நிர்வாகங்கள், தங்களுடைய HR துறையில் விசாரித்தால், நிறைய ஐடியாக்கள் கொடுப்பார்கள்.
இந்தியா விடுதலை அடைந்த காலத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை, குடும்பக்கட்டுப்பாட்டுக்கு என்று பிரச்சாரம் செய்தது. பல கோடி ரூபாய்களை அதற்கென ஒதுக்கி திறமையாக வேலை செய்தது. அது, தந்த பலனை, நாம் நேரடியாகவே பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதே போல சுகாதாரத்துறை அமைச்சகமும், யோசித்து, சிறிது சிறிதாக திட்டங்களைத் துவங்கி, முறையாக சிகரட்டு பழக்கத்தை சமூகத்தில் இருந்தே ஒழித்து விடலாம். சமூகத்தில் இல்லாத காரியம், பின் சினிமாவில் இடம் பெறாது. ( ஒரு சின்ன உதாரணம்,. ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பது அறுபதுகளில் வந்த திரைப்படங்களில், குதிரை பந்தய்சூதாட்டம், பணக்காரர்களின் பொழுதுபோக்காக அடிக்கடி காட்டப்படும். ஏனெனில், அப்போது அது நிஜத்திலும் பணக்காரர்களின் பொழுது போக்காக இருந்தது. பின்னர் குதிரைப்பந்தயம், இருபது ஆண்டுகளாக தடை செய்யப்பட்டபோது, அப்போது இருந்த இரண்டு தலைமுறையினருக்கு குதிரைப் பந்தயம் என்றாலே என்ன என்று தெரியாமல் போனது. இப்போது காட்சி அமைக்கும் உதவி இயக்குனர்கள், ” சார், ஹீரோ ஒரு பெரிய பணக்காரன், அடிக்கடி குதிரை ரேசுக்குப் போவான் ” என்று காட்சி சொன்னால், ” யோவ், குதிரை ரேசெல்லாம், பழைய கதை, ஹீரோ golf ஆடுவான்ன்னு சீனை மாத்து” என்று சொல்வார்கள்) அதை விடுத்து, புகைபிடிக்கிற காட்சிகளைத் தடை செய்கிறேன் என்று இறங்குவது, கொஞ்சம் கூட முன்யோசனை இல்லாத பப்ளிசிட்டி ஸ்டண்ட்டாகத்தான் தோன்றுகிறது.

-சமூக விடியல் இயக்கம்

செவ்வாய், பிப்ரவரி 07, 2012

யுகம்

அசாதாரணமான விஷயங்களை நாம் நிச்சயமாக ஆராயவேண்டும். ஆனால், அசாதாரணமான விஷயங்கள் இருப்பதாகச் சொல்பவர்களுக்கு அசாதாரணமான ஆதாரங்களும் தேவை.

இந்து தத்துவயியலின் படி இவ்வுலகின் காலம் நான்கு யுகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.அவை

1. கலியுகம் 4,32,000 வருடங்கள்

2. துவாபர யுகம் 8,64,000 வருடங்கள்

3. திரேதா யுகம் 1,296,000 வருடங்கள்

4. சத்யுகம் 1,728,000 வருடங்கள்

மொத்தம் 4,320,000 வருடங்கள்

இந்த நான்கு யுகங்களும் சேர்த்து சதுர்யுகம் எனப்படுகிறது. அது போன்று 72 சதுர்யுகங்கள் சேர்ந்தது ஒரு மன்வந்திரம்.

14 மன்வந்திரம் ஒரு கல்பம் எனப்படுகிறது. இது பிரம்மாவின் ஒரு பகல் எனப்படுகிறது. அதாவது 72*14=1008 சதுர்யுகங்கள் =1008*4,320,000=4.35 பில்லியன் வருடங்கள்

இந்து தத்துவயிலின் படி தற்போது இந்த பூமியில் நடப்பது 14வது மன்வந்திரம் அதாவது பூமியின் வயது 4.35பில்லியன் வருடங்கள் எனகணக்கிடப்படுகிறது.

தற்போதய விஞ்ஞான அடிப்படையிலும் பூமியின் வயதை 4.6 பில்லியன் வருடங்களாகவும் அதன் கால இடைவெளியும்  4 Eon களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது

HADEAN              4.6 to 3.9 billion years ago,

ARCHEO-ZOIC    3.9 to 2.5 billion years ago ,

PROTERO-ZOIC  2.5 billion years ago to 540 mya

PHANEROZOIC    540 mya through today

இதில்  உயிரினம் தோன்றி தற்போதய காலம் வரை ஏறக்குறைய 860 மில்லியன் வருடங்கள் கணக்கிடப்பட்டுளன.அவை

4 ERA என்பதாக பிரிக்கப்பட்டு அதுவும் பல PERIOD என பிரித்து அறியப்பட்டுள்ளது.


    1,800,000 quartenary 
      cenozoic 22,200,000  neogene 70,000,000
    46,000,000 paleogene 
       
    75,000,000 Cretaceous 
      mesozoic 49,000,000  jurassic 172,000,000
    48,000,000 triassic 
       
    46,000,000 permian 
    56,000,000 carbonaceous
    42,000,000 devonian 258,000,000
      paleozoic 25,000,000  silurian 
    43,000,000  ordivician 
    46,000,000    cambrian 
       
        Neo proterozoic 
    360,000,000  360,000,000
       
    860,000,000
   

இந்த 4 era கால நிலைகளின் அளவுகள் முறையே
cenozoic 70,000,000 வருடங்கள்
mesozoic 172,000,000 வருடங்கள்
paleozoic 258,000,000 வருடங்கள்
Neo proterozoic 360,000,000 வருடங்கள்

ஆக மொத்தம் 860,000,000 வருடங்கள் ஆகிறது.

இப்போது  இந்து  தத்துவயியலின் படி 860 மில்லியன்  வருடங்களுக்கு  வரும் மன்வந்திரத்தினை   கணக்கிட்டால்

4.35 பில்லியன் வருடங்கள்= 14 மன்வந்திரம்

.86 பில்லியன் வருடங்கள் = 14/4.35*.86=2.76 மன்வந்திரங்கள் ஆகிறது.

இதன் அடிப்படையில் இந்து யுகங்களை கணக்கிட்டால்

கலியுகம் 4,32,000 *2.76*72=85,847,040 வருடங்கள்

துவாபர யுகம் 8,64,000 *2.76*72=171,694,080 வருடங்கள்

திரேதா யுகம் 1,296,000 *2.76*72=257,541,120 வருடங்கள்

சத்யுகம் 1,728,000 *2.76*72=343,388,160 வருடங்கள்

விஞ்ஞான முறைப்படி அறியப்பட்டதுடன் மிகச் சரியாக பொருந்துகிறது

நன்றி : திரு.  ரமேஷ் அப்பாதுரை

வெள்ளி, ஜனவரி 06, 2012

மருத்துவர்கள் போராட்டம் நியாயமானதா....

 மக்களே போராடும் முன் எதற்காக போராடுகிறோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள் கொலை செயப்பட்ட டாக்டர் அறுவை சிகிச்சை செய்பவர் அல்ல மேலும் அவர் ஒரு அனச்ச்தீசிய மருத்துவர் ஆவார் (டெக்கான் குரோனிகல் - 05-01-12).

  அவர் எப்படி அறுவை சிகிச்சை செய்யலாம் என்னதான் அவர் மருத்துவ துறையை சார்ந்தவராக இருந்தாலும் அவர் அந்த துறையில் நிபுணத்துவம் இல்லாமல் ஒரு சிகிச்சையில் அவரர்  ஈடுபடும் போது அவரு போலி மருத்துவருக்கு சமமானவரே.

அவ்வாறு நம் எடுத்துக்கொண்டால் இபொழுது நாடே போரடிகொண்டிருக்கும் போராட்டம் ஒரு போலி மருத்துவருக்காகவா....
ஒரு உயிர் பலி என்பது ஏற்க முடியாதுதான் ஆனால் அதற்காக அந்த மருத்துவரால் இறந்த உயிர் என்பது உயிரில்லையா....

எனவே என்னுடைய மேலான கருத்தெல்லாம் போராட்டம் வேண்டாம்   என்பதே... இறந்த மருத்துவரை மட்டும் அல்ல இறந்த அந்த கர்ப்பிணியையும் சகோதரியாக பாருங்கள் ப்ளீஸ்....

திங்கள், டிசம்பர் 26, 2011

தினம் ஒரு யோகா முத்திரை - 7

Prana Mudra (பிரான முத்திரை):

செய்முறை:

மோதிர விரலயும்  சுண்டு  விரலையும்  சேர்த்து    பெரு விரல்  நுனியை   படத்தில்  காண்பித்திருப்பது  போல்  தொட வேண்டும், மற்ற இரண்டு விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள்:

உடல் வலிமையுரும். நோய் எதிர்ப்பு சக்தி வளரும். கண் பார்வை  குறைபாடு  நீங்கும் வைட்டமின்  குறைபாடு  நீங்கும்.   உடல் தளர்ச்சி சோர்வு நீங்கும்.
கால அளவு:

தினமும்  இயன்ற அளவு செய்து வரலாம்..

வியாழன், டிசம்பர் 15, 2011

துர்வாசரா நீங்கள்?

   இப்போ இருக்கும் பரபரப்பான உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் stress எனப்படும் மனஅழுத்தம் அதிகமாகி கொண்டே வருவதை காணமுடிகிறது.  அதனால் வரும் பின்விளைவுகள் பல, அதில் முக்கியமானது, கோபம்.  நண்டு சிண்டு எல்லாம் மூக்கின் மேல் கோபத்துடன் அலைவதை காணமுடிகிறது.  பொறுமை இன்மையும், இதற்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.  சரி இப்போ என்ன சொல்லவர்ர அப்படின்னு கேட்குறீங்களா?  ஒன்னும் இல்லேங்க, ஒரு ஈமெயில்ல வந்தது எல்லோருக்கும் உபயோகமா இருக்கும்னு தோனுச்சு அதான்.

ஒரு நாள் ஒரு துறவி தன்னோட சிஷ்யபிள்ளையை பார்த்து நம்ம ஏன் கோபம் வந்த கத்துரோம்னு தெரியும்னு கேட்டாரு. உடனே அவரோட தொண்டரடிபொடிகள் எல்லாம், நாம நம்ம அமைதியா இழந்திடரோம் அதனால தான் அப்படிணங்க.  அதை கேட்ட அந்த துறவி, சரி அப்படியே வச்சுகிட்டாலும், நம்ம பக்கத்துல இருகிறவன பார்த்து கத வேண்டிய அவசியம் என்ன இருக்கு? நம்ம மெதுவா பேசினாலே கேட்க போகுது இதுக்கு அனாவசியமா ஏன் கத்தனும்னு கேட்டாரு?  கேட்டது குருவாச்சே பதில் சொல்லாம இருக்க முடியுமா? நம்ம சிஷ்யர்களும் எத்தனையோ பதிகளா சொன்னங்க அதையெல்ல மறுத்துட்டாரு   நம்ம  குரு. சரி அப்போ நீங்களே சொல்லிருங்கன்னு சொன்னங்க நம்ம சிஷ்ய புள்ளைங்க.

இப்போ நம்ம துறவி சொன்னாரு, ஒரு மனுஷன் கோபப்படும்போது, அவன் யார் மேல கோபமா இருக்கானோ அவனோட மனச தள்ளிவச்சு பாக்குறான், அதனால, சத்தமா பேசினா தான் அந்த மனுசுக்கு கேக்கும்னு அவனோட மனசும் மூளையும் அவனுக்கு சொல்லுது, அதனால சத்தமா கத்துறான்.  சரி இதே அவன் இன்னொரு ஜீவன் மேல ரொம்ப பிரியமா இருந்த எப்படி பேசுறான், ரொம்ப மெதுவா பேசுறான். ஏன் அந்த மனசு அவன் மனசுக்கு ரொம்ப பக்கமா தெரியறது தான் காரணம்.  இதே ரொம்ப ரொம்ப பிரியமா இருந்தா, ஒரு கண்ணசைவு கூட போதும் வார்த்தையே தேவை இல்லை அப்படின்னு சொன்னாரு.

இதுல இருந்து நாம தெரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா, நம்ம பிடிச்சவங்கள, நம்ம வாழ்கைல ஒரு அங்கமா இருகரவங்கள, அது அம்மா, அப்பா. அண்ணன், தம்பி, அக்கா, தங்கை,  யாரவேணா இருக்கட்டும், ஒரு நிமிஷம் கூட ஏன் தள்ளி வச்சு பார்க்கணும்?

இந்த உலகத்துலயே சந்தோஷமான விஷயம் எதுனா, அது நமக்கு ரொம்ப பிடிச்சவங்கள சந்தோசமா பாக்குறது தான், அதுவும் அந்த சந்தோசத்துக்கு நாம காரணம்னா அதவிட இந்த உலகத்துல பெரிய விஷயம் எதுவுமே கிடையாது.

படங்கள்: திருவாளர் கூகிளார்  
தினம் ஒரு யோகா முத்திரை - 6

Surya Mudra (சூர்ய முத்திரை):செய்முறை:

மோதிர விரலை   பெரு விரலால் படத்தில் காண்பித்திருப்பது போல்  தொட வேண்டும், மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள்:

உடலில் உள்ள தைரொயிட் சுரபியின் வேலையை ஒழுங்குபடுத்தும். உடல் எடையை குறைக்க மற்றும் கொழுப்பை குறைக்க உதவும்.   படபடப்பை நீக்கும்.  செரிமானத்தை அதிகரிக்கும்.

கால அளவு:

தினமும்  ஒரு 5  நிமிடம் முதல் 15  நிமிடம் வரை காலை மாலை இருவேளையும் செய்து வரவும்.

திங்கள், டிசம்பர் 12, 2011

தேங்காய் பலன

மனிதனின் உயரிய உணவுகளில் தேங்காயும் ஒன்று. நிறைய அன்பர்கள் தேங்காயால்
கொலஸ்ட்ரால் கூடுவதாக எண்ணுகின்றனர். தேங்காயை சமைக்கும் போது முழுமை
பெறாத கொழுப்பில் இருந்து முழுமைப் பெற்ற கொழுப்பாக மாறுகிறது. அதுவே
கொலஸ்ட்ராலாக மாறுகிறது. ஆனால் சமைக்காத தேங்காய், தேங்காய் பால்
மனிதர்களுக்கு மிகுந்த நன்மை புரிகிறது. நோய் எதிர்ப்பு சக்தியைக்
கூட்டுகிறது.


தேங்காயில் உள்ள சத்துக்கள்:
நீர்=36%
புரோட்டின்=4.5%
கொழுப்பு=42%
தாது உப்புக்கள்=1%
நார்ச்சத்து=3.6%
மாவுப்பொருள்=13%
கால்சியம்=10 யூனிட்
பாஸ்பரஸ்=240 யூனிட்
இரும்பு=1.7 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் தேங்காய் பாலில் உள்ள சத்துகள்.

மருத்துவக் குணங்கள்:
சளி, இருமல், ஆஸ்துமா அன்பர்களுக்கு அற்புத பானம்.
மலச்சிக்கல், விலகும். குடல் பூச்சிகள் நீக்கும்.
புற்று நோயை குணப்படுத்தும் உணவு. புலால் உணவை விட உயர்ந்த சக்தி, அதிக
சக்தி தரும் உணவு.
தளராத மன உறுதிக்கு இனிப்புடன் தேங்காய் பால் தினமும் சுவைத்திடுவோம்.

குறிப்பு:
தேங்காய் அல்லது தேங்காய் பாலுடன் இனிப்புக் கலந்து சாப்பிட வேண்டும்.
தனியாகச் சாப்பிடக் கூடாது. கனிகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
தேங்காய் பாலை எல்லா இயற்கைச் சாறுகளுடனும் இணைத்தும் சாப்பிடலாம்.

தினம் ஒரு யோகா முத்திரை - 5

Shunya Mudra (ஷுன்ய  முத்திரை):செய்முறை:

நடு விரலை   பெரு விரலால் படத்தில் காண்பித்திருப்பது போல்  தொட வேண்டும், மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள்:

உடல் சோர்வை நீக்கும்.  காது வலி இருப்பவர்கள்  ஒரூ  4  அல்லது  5  நிமிடம் செய்தல் சரியாகிவிடும்.  காது கேட்பதில் உள்ள குறைபாடு மற்றும் மன வளர்ச்சி குறைபாடுகளை களையும் (அது பிறவி பிழையாக இல்லாவிடில்).

கால அளவு:

தினமும்  ஒரு 45 நிமிடம் எனும்படி தொடர்ந்து செய்து வர வேண்டும்.  நிவாரணம் கிடைக்கும்  வரை.

வெள்ளி, டிசம்பர் 09, 2011

தினம் ஒரு யோகா முத்திரை - 4

Vayu Mudra (வாயு  முத்திரை):செய்முறை:

பெரு விரலால்  ஆள்காட்டி விரலை படத்தில் காண்பித்திருப்பது போல்  தொட வேண்டும், மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள்:

௧. உடலில் வாயுவால் ஏற்படும் தொல்லைகளை நீக்கும். 
௨.cervical spondilaitis எனப்படும் கழுத்து எலும்பு தேய்மானத்தை சரி செய்யும் மேலும் முதுகு தண்டுவட தேய்மானத்தையும் சரி செய்யும்.
௩. ஆர்திரிடிஸ், ருமடிசம், கௌட் எனப்படும் கால் முட்டி வலி மற்றும் பாரிச வாயுவையும் சரி செய்யும்.
௪. வாயுவினால் ஏற்படும் வயிற்று உபதைஹளையும்  சரி செய்யும்.

கால அளவு:

தினமும்  ஒரு 45 நிமிடம் எனும்படி தொடர்ந்து செய்து வர வேண்டும்.  நிவாரணம் கிடைக்கும்  வரை.

வியாழன், டிசம்பர் 08, 2011

தினம் ஒரு யோகா முத்திரை - 3

Varuna Mudra (வருண  முத்திரை):செய்முறை:

சுண்டு விரலால் பெரு விரல் நுனியை தொட வேண்டும், மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள்:

௧. ரத்தத்தில் உள்ள நீர் அளவை கட்டுபடுத்தும். 
௨. தசை சுருக்கத்தை தடுக்கும்.
௩. இரைப்பை குடல் அலர்சி வராமல் காக்கும்.