செவ்வாய், டிசம்பர் 06, 2011

இரு மனம் இணையும் திருமணம்

நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, இது ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய கட்டுரை கதை எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.


அன்று ஒருநாள் நான் வீட்டிற்கு சென்ற பொது என் மனைவி எனக்காக காத்துகொண்டு இருந்தால்.  எனக்கு இரவு உணவை பரிமாறி விடு அவள் எழுந்த போது அவள் கரம் பற்றி அவளை அமர சொன்னேன் "எனக்கு உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்". அதை கேட்ட என் மனைவி என் கண்ணை  ஊடுருவி  என்னை  ஆழமாக  பார்த்தாள்.   பின்  எதுவும்  பேசாமல்  சாப்பிட தொடங்கினாள். அந்த கண்கள் அந்த பார்வை என்னை எதோ செய்வது போல் 
இருந்தது.


என் காலின் கீழே பூமி நழுவுவது போல் ஒரு உணர்வு, என் நாக்கு மேலன்னதோடு ஒட்டிக்கொண்டு வருவேனா பார் என்று பிடிவாதம் பிடித்தது.  ஆனாலும் நான் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட விரும்பவில்லை.  மெதுவாய் தைரியத்தை வரவழைத்து கொண்டு, என் பார்வை எதோ ஒரு சூனியத்தில் நிலைத்திருக்க, செருமிவிட்டு நான் நினைப்பதை சொல்ல துவங்கினேன்.  ஆமாம் எனக்கு விவாகரத்து வேண்டும்.  இதை மெதுவாக நான் சொல்லி முடித்து விட்டேன். ஆனால், அவளிடம் எந்த சலனமும் இல்லை.  மிக மிக மெதுவாய் என்னிடம் ஏன் என்ற கேள்வியை கேட்டாள்.

அவள் கேட்டது என் காதில் விழாதது போல் மெதுவாய் நகர்ந்தேன். அவள் கோபமாக நாற்காலியை பின்னுக்கு தள்ளிவிட்டு என்னை பார்த்து "நீ ஒரு மனிதனே இல்லை" என்று சொன்னாள். அன்று இரவு ஒரு பெரிய மௌன யுத்தமாக கழிந்தது.  அவள் மெதுவாய் அழுது கொண்டிருந்தது தெரிந்தது.  பாவம் அவளுக்கு எங்கள் திருமண வாழ்கைக்கு என்ன ஆயிற்று என்று தெரிந்துகொள்ள நெஞ்சம் துடித்திருக்கும். என்னால் அதற்கு ஒரு வழுவான
காரணமும் சொல்ல முடியாத படி ஒரு நல்ல வாழ்கையை தான் இது நாள் வரை  அவள் பரிசளித்து இருந்தாள்.  ஆனால் நான் தான் என்னை ஜானகியிடம் இழந்து விட்டேனே.  இவளுக்கு என் மனதில் இனியும் இடம் இல்லை அதை என்னால் இவளிடம் சொல்லவும் முடியவில்லை.  எனக்கு இவளை பார்த்து பரிதாப படுவதை தவிர வேறு வழியும் இருக்கவில்லை.

என் இதயம் குற்ற உணர்வால் கனத்தது, அந்த உணர்வுடன் ஒரு விவாகரத்து பத்திரத்தை தயார் செய்தேன். என் வீடு, கார் மற்றும் என் கம்பெனியின் 30  விழுக்காடு பங்குகளை அவள் பெயருக்கு எழுதினேன்.  அந்த பத்திரத்தை பார்த்ததும் அவள் சுக்கு நூறாக கிழித்து எறிந்தாள்.  ஒரு  பெண்  அதுவும் என்னுடன் பத்து வருடம் வாழ்தவள் எப்படி ஒரே நாளில் அன்னியமாக முடியும்?  எனக்காக அவள் செய்த தியாகங்கள் எல்லாம் என் கண் முன்னே ஒரு விநாடி படமாய் வந்தது.  எனக்கு அது மிகுந்த வருத்தத்தை  அளித்தது எனினும் எனக்கு ஜானகி மேலிருந்த காதலில் இது ஒன்று பெரிதாக தோன்றவில்லை. கடைசியில் அவள் மிகுந்த சத்தத்துடன் அழ துவங்கினாள், அது அவளுக்கு  சற்று ஆறுதலை கொடுக்கும் என்று நான் எண்ணினேன்.  கடந்த  சில  வாரங்களாக  என்  மனதில்  இருந்த  விவாகரத்து எண்ணம் வலுபெற்று பிடிவாதமாக மாறிக்கொண்டு இருந்தது.

அடுத்த நாள், நான் தாமதமாக வீட்டிற்கு வந்த போது அவள் ஏதோ எழுதிகொண்டிருந்தாள்.  அன்று முழுவதும் ஜானகியுடன் ஊர் சுற்றிவிட்டு வந்ததால் இரவு சாப்பிடாமல் படுத்து உடனே உறங்கியும் விட்டேன்.  அதிகாலை விழிப்பு வந்த போது அவள் இன்னும் எதோ எழுதிக்கொண்டு இருந்தாள். அடுத்த நாள் கலை அவள் என்னிடம் தன்னுடைய விவாகரத்து ஷரத்துகளை கூறினால்.

முதல் ஷரத் என்னவென்றால்,  எங்கள் மகனுக்கு ஒரு மாதத்தில் தேர்வுகள் வருவதால், எங்கள் விவகாரத்தை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்பது.  அதை கூட என்னால் ஏற்றுகொள்ள முடிந்தது ஆனால், அவளது இரண்டாவது ஷரத்தான் எனக்கு அவளுக்கு கிறுக்கு பிடித்து விட்டதோ என்று எண்ண தோன்றியது. அது என்னவென்றால், எங்கள் திருமணத்தன்று  அவளை நான் தூக்கியது போல் தினமும் அவளை நான் தூக்க வேண்டும்.  இதை நான் ஜானகியிடம் சொன்ன போது அவள் கண்களில் கண்ணீர் வரும் வரை சிரித்தாள், பின் சொன்னாள் அவள் என்ன ஜாலம் காட்டினாலும் விவகாரத்தில் irunthu தப்பிக முடியாது என்று.  எனக்கும் அது சரிதான் என்று பட்டது.

எனக்கும்   என் மனைவிக்கும் எந்த நெருக்கமும் இல்லாவிட்டாலும், அவளை தினமும் தூக்கிகொண்டு போகிறேன் என்று ஒத்துகொண்டதால்  கடனே என்று தூக்கி செல்லலாம்  என்று தீர்மானித்தேன்.  முதல் நாள் அவளை தூக்கி செல்லும் போது எங்கள் இருவருக்கும் கொஞ்சம் வெட்கமாக இருந்தது.  ஆனால் எங்கள் மகனுக்கு அது மிகவும் சந்தோசத்தை கொடுத்தது எங்களுக்கு மேலும் எங்களை சங்கடபடுத்தியது.  நான் அவளை தூக்கி கொண்டு நடக்கும் போது அவள் கண்களை மூடிகொண்டு  ரகசியமாய் என் காதில் இதை எங்கள் பையனுக்கு சொல்ல வேண்டாம் என்று சொன்னாள், நானும் தலை ஆட்டினேன், ஆனால் என்னக்கு உள்ளுக்குள் சற்று வருத்தமாக இருந்தது. 

இரண்டாவது நாள்,  எங்கள்  இரண்டு பேருக்குமே இப்படி இருபது சற்று சுலபமாக இருந்தது.  அவள் மெதுவாக என் தோளில் சாய்ந்து கொண்டாள்.  அப்போது தான் எனக்கு, இந்த பெண்ணை எத்தனை நாளாய் நாம் சரியாக கவனிக்கவில்லை  என்று தோன்றியது.  அவளது முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் அவள் நரை முடி எங்கள் திருமண வாழ்கையில் அவள் தொலைத்த இளமையை சொல்லியது.  ஒரு நிமிடம் எனக்கு நான் அவளது இப்போதைய நிலைமைக்கு காரணம் என்பது உறுத்தியது.

நான்காவது நாள், நான் அவளை தூக்கும் போது எங்களுக்குள் பழைய அன்னியோன்யம் திரும்பி விட்டதை உணர்ந்தேன்.  ஆறாம் நாள் மற்றும் ஏழாம் நாள் அது நெருக்கம்மாவதை உணர்ந்தேன். ஆனால் இதை நான் ஜானகியிடம் சொல்லவில்லை. மேலும் ஒரு மாதத்தில் அவளை தூக்கி செல்வது மிகவும் எளிதாகி கொண்டு இருந்தது.  இப்ப தூக்கி கொண்டு நடப்பது என்னை பலசாளியாக்கி   கொண்டு இருந்தது. 
அவள் ஒரு நாள் காலை, தனக்கு blouse  தேடி கொண்டு இருந்தாள்.  அவளது அத்தனை
blouseஸ்ம் தொள தொள என்று  இருந்தது.  சட்டென்று, எனக்கு அவள் மெலிந்திருப்பது உரைத்தது.  அதனால் தான் என்னால் அவளை சுலபமாக தூக்கி செல்ல முடிந்தது.  அவள் எத்தனை வேதனைகளை தான் மனதில் ஒளித்து வைத்திருந்திருக்கிறாள். என் மனதால் அவள் இதயத்தை வருடினேன்.
என் மகன் என்னிடம் வந்து அப்பா அம்மாவை தூக்கி செல்லும் நேரம் வந்துவிட்டது என்று சொன்னான்.  நான் அவளை தூக்கி செல்வது வாழ்கையின் ஒரு அங்கமாகிவிட்டது.  என் மனைவி அவனை அருகில்  அழைத்து அணைத்து கொண்டாள்.  நான் என் பார்வையை திருப்பி கொண்டேன், என் முடிவை  மாற்றிக்கொண்டு விடுவேனோ என்று பயந்தேன். அவளை நான் தூக்கிகொண்டு வாசல் வரை வந்தேன். எங்கள் திருமணத்தன்று தூக்கியது போலவே உணர்ந்தேன்.
அவளது மெலிந்த தேகம் என்னை வதைத்தது.  கடைசிநாள் அவள் என் கையை பிடித்த போது என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. என் மகன் பள்ளிக்கூடம் சென்று விட்டான்.  நான் அவளை இறுகி அணைத்து கொண்டு சொன்னனேன்,  நமது  வாழ்கையில் இந்த அன்னியோன்யம் தொலைந்து போயிருந்தது.  பின் நான் எனது அலுவலகத்திற்கு சென்றேன்.  இன்னும் சிறிது நேரம் இருந்தாலும் என் mudivai மாற்றிக்கொண்டு விடுவேனோ என்று பயந்து தான் சட்டென்று கிளம்பினேன்.  ஜானகியை பார்த்து  நான் என்னுடைய விவாகரத்து முடிவை  மற்றிகொன்டத்தை சொன்னேன். 


அவள் என்னை பார்த்து அதிர்ச்சியாய் கேட்டாள், "உனக்கு என்ன ஆச்சு உடம்பு முடியலையா?" என்று.  நான் அவளிடம் என்னை மன்னித்து விடு ஜானகி, எனக்கு என் திருமண வாழ்க்கை சுவாரசியமாக இல்லாததால் தான் இந்த முடிவு தோன்றியிருக்கும் என்று நினைக்கிறேன்.  ஆனால், அது தற்போது அப்படி இல்லை மேலும் நான் வாழ்கையின் சாராம்சத்தை புரிந்து கொள்ளாமல், அதன் மதிப்பு தெரியாமல் நடந்து கொண்டுவிட்டேன்.  இப்போது தான் எனக்கு அவளை வாழ்க்கை முழுதும் சுமப்பேன் என்று அக்னியை வளம் வந்து செய்த சத்தியம் எதை உண்மையானது என்பது புரிந்தது.  எங்கள் வாழ்க்கையில் மரணம் வரும் வரை இந்த பந்தம் தொடர்வதுதான் உத்தமமான முடிவாக இருக்கமுடியும் என்று சொன்னேன்.  இதை கேட்ட அவள் என் கன்னத்தில் அறைந்தாள்.  நான்  என் வீட்டுக்கு திரும்பினேன். வழியில் ஒரு பூக்கடையில் சிறிது  மல்லிகை பூவும், ஒரு பூங்கொத்தும் வாங்கினேன். அதில், உன்னை தினமும் சுமப்பேன் நம் வாழ்நாள் வரையில் என்று எழுத சொன்னேன்.

 நான் புன்னகையுடனும், பூங்கொத்துடன் என் வீட்டில் நுழைந்த போது அவள் உயிர் அவளிடம் இல்லை. ஆமாம், நான் ஜானகியுடன் ஊர் சுற்றிக்கொண்டு இருந்த போது அவள், கேன்சர்ருடன் போராடிக்கொண்டு இருந்திருக்கிறாள். அவளுக்கு தான் ஒரு மாதத்தில் இறந்து விடுவோம் என்பது முன்பே தெரிந்திருந்ததால் தான் விவாகரத்துக்கு இந்த ஒரு மாதம் கெடு கேட்டதும், என்னை தூக்கி கொண்டு செல்ல சொன்னதும், என் மகனின் பார்வையில் என்னை ஒரு அன்பான கணவனாக உயர்த்தி காட்டவே என்பதும் புரிந்தது.

நம் வாழ்கையில் இது போல் சின்ன சின்ன விஷயங்கள் உறவு பாலத்தை நீடிக்க தேவை படும்.  கார், பங்களா, சொத்து சுகம் இவை எல்லாவற்றையும் மீறி வாழ்கையில் நம் சந்தோசத்திற்கு சிறிது அன்னியோநியமும் புரிதலும் தேவை.  நண்பர்களே உங்கள் வாழ்க்கை துணையுடன் தினமும் சிறிது நேரம் செலவழித்து அன்னியோனியத்தை வளர்த்து கொள்ளுங்கள். அது உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க  உதவும்.

இது என்னுடைய ஈமெயிலில் வந்தது, உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் மொழி மாற்றம்  செய்திருக்கிறேன்.
 

2 கருத்துகள்:

Vidhya Rathinam சொன்னது…

ithula irunthu ena sola varenga?
ongala thookanuma? ayo paavam onga husband.kastam than. ha ha ha ha

kannan Seetha Raman சொன்னது…

Nice.