திங்கள், டிசம்பர் 05, 2011

தினம் ஒரு யோகா முத்திரை - 1

நம் இந்தியாவிலிருந்து இந்த உலகம் கற்றுகொண்டது எத்தனையோ, அதில் இந்த யோகாவும் முக்கியமனது.  சென்ற வருடம் நான் அமெரிக்க சென்ற பொது எங்கள் அலுவலக அமெரிக்க கிளையில் பணிபுரியும் பெண்ணிடம் பேசிக்கொண்டு இருந்தபோது நமது யோகா மேல் அவர்களுக்கு உள்ள ஈர்ப்பை புரிந்து கொள்ள முடிந்தது.  அந்த பெண் யோகா பயின்றதுடன் அதை தினமும் பயிற்சி செய்துகொண்டு இருப்பதாக கூறியதுடன் வார இறுதி நாட்களில் தனியாக பயிற்சி வகுப்புகள் எடுப்பதாகவும்  கூறினார்.

ஆனால், அத்தகைய அருமையான கலையை இந்த உலகுக்கு அளித்த நாம்,  இதை தொடர்ந்து பழகுவதில், பயிற்சி செய்வதில் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதில் கவனம் செலுத்துகிறோமா?  நிச்சயமாக இல்லை என்பதே நம்மில் பெரும்பாலானவர்களின்  பதிலாக  இருக்கும்.  நம்முடைய  பொக்கிஷத்தை, அடுத்த வீட்டுக்காரன் அனுபவிக்கவும் சொந்தம் கொண்டாடவும் விட்டுவிட்டு,  பஞ்ச பராரியாய் அலைவதில் என்ன பலன்?  கொஞ்சம் சிந்திப்போம் நண்பர்களே...


நம்முடைய  இந்த அலட்சியத்திற்கு நாம் சொல்லும் காரணம், நமக்கு நேரம் இல்லை என்பதே.  ஒரு அருமையான கலையை நம் சமுகத்திற்கு மிக சிறிய அளவிலேனும் எடுத்து செல்ல வேண்டும் என்பதற்க்காகவே இந்த பதிவு.  இதில் மிக சிறிய முத்திரைகள், எந்த நேரத்திலும் நாம் செய்ய முடிந்த சில முத்திரைகளை நான் பதிவிட உள்ளேன்.  படித்து பயன் அடைய விரும்புவோர், பயன் அடையலாம்.

Gyan  Mudra (ஞான முத்திரை):



செய்முறை:

ஆட்காட்டி விரலால் பெரு விரல் நுனியை தொட வேண்டும், மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கி இருக்க வேண்டும்.

பயன்கள்:

௧. நினைவாற்றல் மற்றும் மூளை செயல் திறன் மேம்படும்.
௨. மனதை ஒரு நிலைபடுத்த மற்றும் தூக்கமின்மை சரியாகும்.
௩. தினமும் பயிற்சி செய்ய மனநிலை குறைபாடுகள் , ஹைச்டேரியா, கோபம், மற்றும் மனச்சோர்வு போன்றவை குணமாகும்.
௪. நாளமில்லா சுரப்பிகள் மற்றும் பிடுயடரி (endocrine  and   pituitary  glands ) தூண்ட பெரும் அதனால் அவற்றின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும்.

கருத்துகள் இல்லை: